Lions Club of Batticaloa Singingfish அரிமா கழகத்தினால் வாழைச்சேனை விவேகானந்தா Girls Home இல் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுகாதார வசதிகளை கொண்ட மலசல கூடத்துடனான குளியல் அறைகளினை அமைத்து கையளிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை 10.05.2026 இடம்பெற்றது.
லயன்ஸ் கழகத் தலைவர் லயன் எஸ். மனோகரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக லயன்ஸ் மாவட்டம் 306 D 10 மாவட்ட ஆளுநர் Lion K. Logendran PMJF/PMAF, மற்றும் முதல் பெண்மணி Lion Lojitha Logendran ஆகியோரும், கௌரவ அதிதிகளாக Lt Col Rohana Wimalasena Maj Semasinghe Alahakoon னும், சிறப்பு அதிதியாக விவேகானந்தா பெண்கள் இல்லத் தலைவர் எஸ். Chandrakumar, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் செயலாளர் லயன் P.G. டேவிட் MAF, பொருளாளர் லயன் M. விதுசாகன் MJF/MAF, மாவட்ட ஆளுநரின் முதன்மை நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளரும் மற்றும் துணை ஆளுநர் சபைப் பொருளாளருமான லயன் P. சடாட்சரராஜா MJF/PMAF, GMST ஒருங்கிணைப்பாளர் லயன் N. தர்ஷன் PMAF, GMCT ஒருங்கிணைப்பாளர் G. முரளிதரன் MAF, மண்டலத் தலைவர் லயன் T. சுபாஷ்கரன் MAF, மட்டக்களப்பு சிங்கிங் பிஷ் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் வாழைச்சேனை, ஆரையம்பதி லயன்ஸ் கழக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இத்திட்டம், மனிதநேய சேவை மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான Lions Club of Batticaloa Singingfish கழகத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதோடு, தேவையுள்ள சிறுமிகள் மற்றும் குழந்தைகளின் நலன் மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான அதன் பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது.
சுமார் 7 மில்லியன் மதிப்பிலான இத்திட்டத்திற்கு எஸ். சுரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் முழுமையான அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

