மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி நிகழ்வு 13 வருடங்களின் பின்னர் நேற்று (18) பிற்பகல் 4.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

 

 

 

பழைய மாணவர்கள் அமைப்பின் பூரண அனுசரணை மற்றும் ஆதரவுடன் பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் ரிப்கா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை கரையோர பிராந்திய அபிவிருத்திக் குழுத் தலைவருமான ஏ. ஆதம்பாவா கலந்து கொண்டார்.

 

 

 

கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிமனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம். ஹஸீன், எம்.எல்.எம். முதர்ரிஸ், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா ஏ. மாலிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

 

பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு விளையாட்டு திறன்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் 326 புள்ளிகளை பெற்று ஹாதி இல்லம் (பச்சை) இம்முறையும் மீண்டும் சம்பியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *