கிளிநொச்சி மாவட்டத்தில் பருவமழையைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு களையான பாத்தீனியம் வேகமாக பரவி வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட விவசாயத் திணைக்களம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கனகாம்பிகைக்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட தொண்டமாநகர் பகுதியில், பொது நோக்கு மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள ஏ9 வீதியோரத்தில் சிரமதானம் மூலம் பாத்தீனியம் அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த பாத்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் வி. சோதிலட்சுமி, கனகாம்பிகைக்குளம் விவசாய போதனாசிரியர்கள் பிரதீபன், ஷிவனியா, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

