முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை முன்னிட்டு கிளிநொச்சி முரசுமோட்டை வட்டார பொது அமைப்புக்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் நேற்று முரசுமோட்டை பகுதியில் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமில் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவான மக்கள் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர்.
முள்ளிவாய்க்கால் உயிரிழந்தோரின் நினைவாக மனிதாபிமான செயற்பாடாக இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

