அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுமி தொடர்பான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 வயது சிறுமி ஒருவருடன் தொடர்புடைய குற்றச்சாட்டு விவகாரத்தில், 21 வயதுடைய மௌலவி ஒருவரும் மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் போது தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் பின்னர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு 21 வயது இளைஞரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார்.
இருவரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலான கவலையும் கண்டனமும் எழுந்துள்ளது.
சம்பவம் குறித்து இறக்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

