29 நாட்களில் ரூ.332 கோடியை கடந்த ‘கருப்பு’ திரைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2026ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட இப்படம், வெளியானபோது கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததாக கூறப்படுகிறது.

வெளியான முதல் நாளிலிருந்தே வசூலில் அதிரடி காட்டி வரும் ‘கருப்பு’, ரூ.100 கோடி, ரூ.200 கோடி, ரூ.300 கோடி உள்ளிட்ட முக்கிய மைல்கற்களை தொடர்ந்து கடந்து சாதனை படைத்து வருகிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், நேற்று ஓடிடி தளத்திலும் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஓடிடி வெளியீட்டுக்குப் பின்னரும் திரையரங்குகளில் வசூல் வேட்டை தொடரும் நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகி 29 நாட்களில் உலகளவில் ரூ.332 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக ‘கருப்பு’ இடம்பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *