யாழில் 6 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோலி தெற்கு பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (12) இரவு குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சிறுவனின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது.

உயிரிழந்த சிறுவன் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *