கொழும்பு காலி முகத்திடலில் இன்று 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு சிறப்பாக அரங்கேறியது.
இந்தியாவைச் சேர்ந்த சங்கமம் குளோபல் அகடமி மற்றும் இலங்கையின் சங்கமிழ் லியா ஹொலிடேஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சியை ஒரே இடத்தில் நடத்தும் நோக்கில், கின்னஸ் உலகச் சாதனை முயற்சியாக இந்த நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கலைஞர்கள் ஒரே மேடையில் இணைந்து பரதநாட்டியத்தை நிகழ்த்தியமை இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.

