நிர்வாணக் காட்சிகளைப் படம் பிடித்து கப்பம் கோரியதாக ஜோடி கைது

மசாஜ் நிலையத்திற்குச் சென்ற வர்த்தகர் ஒருவரின் நிர்வாணக் காட்சிகளை திருட்டுத்தனமாகப் பதிவு செய்து, ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரியதாக கூறப்படும் சம்பவத்தில் ஜோடியொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்குப் பிராந்தியக் குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, சந்தேக நபரான பெண், குறித்த வர்த்தகரின் நிர்வாணக் காட்சிகளை அவரது வாட்ஸ்-அப் இலக்கத்திற்கு அனுப்பி, அவற்றை சமூக ஊடகங்களிலும் அவரது மனைவியிடமும் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 1,50,000 ரூபாய் பணம் வர்த்தகரிடமிருந்து பெறப்பட்டு, சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் மற்றும் கண்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வர்த்தகரின் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தலாங்கம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *