மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பரவல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (17) நடைபெற்றது.

 

அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் சுட்டிக்காட்டப்பட்டதனை முன்னிட்டு உயர் மட்ட கலந்துரையாடல் இடம் பெற்றது.

 

மேலும் மாவட்டத்தில் மண்முனை வடக்கு மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளில் அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

மாவட்டத்தில் தற்போது பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தரவுகளின் படி அதிக ஆபத்து நிலவுகின்ற பகுதிகளாக சந்திவெளி, முறக்கட்டான்சேனை, நொச்சுமுனை, கல்லடி, வேலுர், குழாவடி போன்ற பிரதேசங்களில் டெங்கு நோய் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

 

மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கும் இடங்களை அகற்றுதல், சுத்தம் பேணுதல் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு வழங்குவதனால் பாதிப்புக்களை தவிர்க்க முடியும்.

 

வீடுகளில் காணப்படும் கிணறுகளில் டெங்கு குடம்பிகளை உண்ணக் குடிய மீன் வகைகளாக குறா மற்றும் கப்பிஸ் மீன் இனங்கள் வளர்ப்பது டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவற்கு எதுவாக அமையும்.

 

மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாமல் இருப்பதற்கு மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவதனால் டெங்குவினால் ஏற்படும் மரணத்தை தவிர்க்க முடியும்.

 

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், வைத்தியர் ரீ . சரவணன், பதவிநிலை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *