ராகமை பகுதியில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ராகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொடிவீகும்புர பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ராகமை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *