நேபாளத்தில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் – 14 பேர் பலி, 7 பேர் காயம்!

நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில் மின்சார பயணிகள் மைக்ரோபஸ் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 700 மீற்றர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12) அதிகாலை சுமார் 5.45 மணியளவில் மக்வான்பூர் மாவட்டத்தின் பிம்பேடி கிராமப்புற நகராட்சிக்கு உட்பட்ட சிசாபானிகாதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தலைநகர் காத்மாண்டுவிலிருந்து தெற்கு நேபாளத்தின் சர்லாஹி மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த மின்சார மைக்ரோபஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான வாகனம் வீதியை விட்டு விலகி சுமார் 700 மீற்றர் ஆழமான பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *