கிரிஉல்லை – நீர்கொழும்பு வீதியில் நாரங்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரிஉல்லை பகுதியில் இருந்து பன்னலை திசையை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியின் பின்னால் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்பதெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதுடைய, யோகியான பகுதியில் வசித்து வந்த இளைஞராவார்.
விபத்து தொடர்பில் ரிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரிஉல்லைக் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

