IPL வீரர்கள் தக்கவைப்பு பட்டியல்: காலக்கெடு அறிவிப்பு!

2027 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16 ஆம் திகதி கோவாவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகம்,வீரர்களைத் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் பட்டியலைச் சமர்ப்பிக்க 10 அணிகளுக்கும் நாளை(17) வரை கால அவகாசம் அளித்துள்ளது.

இதனால் அனைத்து அணிகளின் பட்டியல்களும் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2027 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில், இதுவரை 10 வீரர்கள் வர்த்தக முறையில் அணிகளுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாளை வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியல் வெளியாகும்போது, எந்தெந்த நட்சத்திர வீரர்கள் அணிகளில் தொடர்கிறார்கள், யார் ஏலத்துக்கு வருகிறார்கள் என்பது தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *