வவுனியாவில் பாம்பு தீண்டியதில் 21 வயதுடைய யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பாம்பு தீண்டிய நிலையில் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த யுவதி, மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

