பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், சர்வதேச ரீதியில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை 16 நாட்கள் விழிப்புணர்வுப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, திருகோணமலை பெண்கள் வலை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று (25) திருகோணமலை பெண்கள் வலை அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்துதல், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துதல் மற்றும் முறைப்பாடு செய்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டன.
பெண்கள் வலை அமைப்பின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான பாத்திமா முனாசிர் வளவாளராகக் கலந்துகொண்டார்.
அமைப்பின் இணைப்பாளர் கிரிஜா சக்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

