மேஷம்: குடும்ப உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, வீடு, வாகனம் தொடர்பான யோகங்கள் அமையும். பிள்ளைகள் மீது கவனம் தேவை.
ரிஷபம்: வாழ்க்கைத்துணையுடன் உறவு மேம்படும். நண்பர்களால் நன்மைகள் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை.
மிதுனம்: புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், தொழிலிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும்.
சிம்மம்: எந்தச் செயலையும் நிதானமாக மேற்கொள்ள வேண்டும். பேச்சில் கவனம் தேவை.
கன்னி: குடும்ப உறவுகள் பலப்படும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உடல்நலத்தில் கவனம் தேவை.
துலாம்: நீண்டகாலமாக இருந்த தடைகள் நீங்கி, சாதகமான சூழல் உருவாகும். பேச்சில் நிதானம் அவசியம்.
விருச்சிகம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க வேண்டும். உடன்பிறப்புகள் மூலம் நன்மைகள் கிடைப்பதுடன் புதிய நட்புகளும் உருவாகும்.
தனுசு: சுப நிகழ்வுகள் மற்றும் ஆன்மீகப் பயணங்கள் அமைய வாய்ப்புள்ளது. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மகரம்: வாழ்க்கைத்துணை மற்றும் நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். சொத்து மற்றும் வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் அமையும்.
கும்பம்: தொழில் நிமித்தமாக வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். முதலீடுகளில் நீண்டகாலத் திட்டமிடல் அவசியம்.
மீனம்: மனக்குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகளும் சுப நிகழ்வுகளும் இடம்பெற வாய்ப்புள்ளது. பாதியில் நிறுத்திய கல்வியைத் தொடரும் வாய்ப்பும் அமையும்.

