குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் சமூகப் பாதுகாப்பு நிபுணர் கே. விமலநாதனின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
சமூகப் பாதுகாப்பு தரவு பதிவேற்றம், அஸ் வெசுமசெயற்றிட்டமும் அதன் எண்ணக்கருவும், சமூக பாதுகாப்ப்பு என்றால் என்ன?,
சமூக பாதுகாப்பு தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகள், சமூகப் பதிவேடு (தரவும் கட்டமைப்பு) மற்றும் தரவுக் கட்டமைப்பு பாதுகாப்பு முறைமைகள் தொடர்பாக இதன் போது தெளிவுபடுத்தியிருந்தனர்.
குறித்த முழு நாள் செயலமர்வில் உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் விடய உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் விடயத்துடன் தொடர்புபட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



