வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் இன்று மேற்பார்வை

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இன்று காலை 10 மணியளவில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்டு எல்லைப்படுத்தி சென்றனர்.

குறித்த பிரதேசத்தில் வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவிக்கையில்,

தமது பிரதேசத்தில் வளங்கள் சூறையாடப்படுவதாகவும் அது தொடர்பாக எந்த தகவல்கள் தெரிந்தாலும் தமக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் எனவும் வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தமது எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தமது அனுமதியுடன் கட்டடங்கள் அமைப்பதற்கு தாம் அனுமதி கொடுப்பதாகவும் குறிப்பாக மருதங்கேணி பருத்தித்துறை வீதியின் ஆற்றங்கரை பக்கம் எந்தவித அனுமதியும் கொடுக்க மாட்டோம் என கூறினார்.

அவ் எல்லைகள் விசேட எல்லைகளுக்கு உட்பட்டு இருப்பதால் கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்க கடினம் எனவும் கூறியுள்ளனர்.

தாம் மெல்ல மெல்ல தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை விடுவிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை முக்கிய கட்டடங்கள் கட்டுவதற்கு தம்மை உரிய முறையில் நாடினால் தாம் அனுமதி கொடுப்பதாகவும் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *