தமிழ் சினிமாவில் “அதிரன்” திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

தமிழ் சினிமாவில் “அதிரன்” திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று One Galle Face PVR Cinema திரையரங்கில் திரைப்பிரபலங்களின் கோலாகலத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு இலங்கை தமிழ் திரையுலகத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில் இருந்தது. படத்தின் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டும் அல்லாது, ஊடக பிரதிநிதிகள், தொழில்துறையின் முக்கிய விருந்தினர்கள், வணிகத் தலைவர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரம்மாண்ட திரைப்பார்வையை ரசித்தனர்.

திரைப்பட  கதை, திரைக்கதை , இயக்கம் தினேஷ் கனகராஜ் அவர்களால் சிறப்பாக இயக்கப்பட்டு, இசை அமைப்பில் சகிஷ்ணா சேவியர் அவர்களின் ஒலிப்பொழிவு ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்தது.

ஒளிப்பதிவு கதீர் ராஜசேகரம், வசனங்கள் சுகிர்தன் கிரிஸ்துராஜா & ஜெனோசன் ராஜேஸ்வர் , படத்தொகுப்பு மற்றும் தமிழ் டப்பிங் எஸ்.ஆர். துசிகரண் ஆகியோரின் அருமையான பணியால் உருவாகியுள்ளது. திரைப்படத்தின் கதாநாயகனாக சுதர்ஷன் ரவீந்திரன் & கதாநாயகி சகோதர மொழி திரைப்பட நடிகை மிஷேல் தில்ஹரா படத்தின் சண்டைக் காட்சிகளை கௌசல்யா நிர்மாணா ஒருங்கிணைத்ததுடன், கலை இயக்கம் பிரிய லக்ஷனின் பங்களிப்பும் குறிப்பிடதக்கது.

இலங்கையின் முன்னணி நட்சத்திர பட்டாளங்களுடன் திரைப்படம் களம் கண்டிருக்கின்றது.

பிரதான நட்சத்திர நடிகரும், ஊடகவியலாளருமான எல்றோய் அமலதாஸ், க்ரிஷான் வினோதன், ஷாமளா நிரஞ்சன்,  அருண் சுசீன், செல்வராஜ் லீலா, மொஹமட் உஸ்மான், டி.எம்.கே. மிதுன்,கருணாகரன்,  ஒனாசீஸ்,அமராதாஸ் ஜே.பி. ,ஜமால்தீன் முஷமில் , திலன் பாலகுமார் ஆகியோர் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர். மற்றும் கீர்த்தனா,  கவிஷா,திலீபா,கவியா,கே.எஸ். கேத்தீஸ்வரன்,மகேந்திரா, சமுதித உதார, லாரா லோபஸ்,  சஹானா மாத்தூசூத்தன், துலாசி கொங்கஹவட்ட,நீல் ரெக்ஸன்,விஜயகுமார், ஷான், கணேசன், விஜய் ,திவ்யன், ரேஸ்மி,தயாளன்,சஃப்ரான் ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடதக்கது.

அதிரன் – பரவச  தருணம்!
திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானவுடன், அது திரையரங்கில் கூடியிருந்த அனைவரையும் ஆச்சரியத்திலும், பரவசத்திலும் ஆழ்த்தியது. அதிரடியான திரைக்கதை, நவீன தொழில்நுட்ப காட்சிகள், வசீகரமான பின்னணி இசை, மற்றும்சர்வதேச தரத்திற்கு ஒத்த அபாரமான ஒளிப்பதிவு ஆகியவை அனைவரையும் கட்டிப்போட்டன.
‘அதிரன்’ – தமிழ் திரையுலகில் ஒரு மைல்கல்லாக மாறும்!
இந்த ஆண்டின் மிக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ‘அதிரன்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இனி, திரைப்பட வெளியீட்டை மே மாதத்தில்  வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *