உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு பிளாட்டினம் விருது

இலங்கையிலிருந்து செயற்பட்டு வரும் உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு கடந்த 05.04.2025 அன்று கொழும்பில் நடைபெற்ற வேல்ட் இன்டனேசனல் அவோட்ஸ் 2025 நிகழ்வில் “வாஸ்டெஸ்ட் குறோவிங் எடியுகேசனல் இன்சிடியுட் டி ஒவ் த இயர் எடியுகேசனல் இன்சிடியுட் சேர்விஸ்” என்ற சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் தலைமையமாகக் கொண்டு இயங்கி வரும் உயர் சர்வதேச கற்கை நிறுவகம் கல்வித் துறையில் மாபெரும் சாதனையை ஏற்படுத்தியதற்காகவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ் விருதை நிறுவனத்தின் தலைவர் த.துஷ்யந்தன் மற்றும் அவரது குழுவினரும் இதன்போது கலந்து கொண்டு கொண்டுள்ளனர்.

கற்கை நிறுவகமானது தற்போது டிப்ளோமா, டிக்றி பட்டப்படிப்புகளை யூஐூசி அங்கீகாரம் பெற்ற பன்னாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடாத்திவருகிறது.

விரைவில் மாஸ்டர் டிக்றி கற்கை நெறியையும் வழங்கவுள்ளதாகவும் இந்த விருதானது எங்களது கல்விப் பணிக்கான சர்வதேச அங்கீகாரம் என இதன்போது இந்நிறுவனத்தின் தலைவர் த.துஷ்யந்தன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *