சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரப் பணிகள் நேற்று(27) சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்டன.
அந்த வகையில், சம்மாந்துறை வளத்தாப்பிட்டி வட்டாரக் கூட்டம் வட்டார வேட்பாளர் சாந்தகுமார் தலைமையிலும, மஜீட்புரம் வட்டார பொதுக்கூட்டம் மஜீட்புரம் வட்டார பட்டியல் வேட்பாளர் இர்ஷாட் தலைமையிலும், மல்கம்பிட்டி வட்டார பெண்கள் சந்திப்பு வட்டார வேட்பாளர் ஹினாயதுல்லாஹ் தலைமையிலும், மட்டக்களப்பு தரவை வட்டார பெண்கள் சந்திப்பு வட்டார வேட்பாளர் சாஜித் தலைமையிலும் மற்றும் சம்மாந்துறை மத்தி வட்டாரப் பொதுக்கூட்டம் வட்டார வேட்பாளர் முபீஸ் தலைமையிலும் இடம்பெற்றன.
இந் நிகழ்வுகளில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, காத்திரமான கருத்துக்களை முன்வைத்தார்.
தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை பிரதேச செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


