ஹட்டன் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் லிந்துலை அக்கரப்பத்தனை ஹென்போல்ட் தோட்ட ஆக்ரா (வாழைமலை) பிரிவில் கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்து உயிருக்குப் போராடிய சிறுத்தையை நேற்று(20) நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டது.
4 முதல் 5 வயதுக்குட்பட்ட நன்கு வளர்ந்த ஆண் சிறுத்தை இது எனவும் ரந்தெனிகல வனவிலங்கு திணைக்களத்தின் பிரதான அதிகாரியும் கால்நடை வைத்தியருமான அகலங்க பினிடியா தெரிவித்தார்.
ஒரு பெரிய குழியில் விழுந்த பிறகு மீட்கப்பட்ட இந்த சிறுத்தையின் உறுப்புகள் சேதமடைந்துள்ளதா என்பதைப் பரிசோதிக்க பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும், மேலும் சிறுத்தைக்குத் தேவையான சிகிச்சையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹக்கல வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளினால் பெரும் முயற்சியுடன் மீட்கப்பட்ட இந்த சிறுத்தையை பின்னர், சிகிச்சைக்காக ரந்தெனிகலை வனவிலங்கு கால்நடை பிரிவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.


