இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளரான பிரைம் ரெசிடென்சிஸ் பிஎல்சி, ‘ஒன் தங்கல்லே’ எனும் அதி-சொகுசு நிர்மாணத் திட்டத்தை தென் பகுதியில் வசிக்கக்கூடிய கடற்கரை முகப்பு பகுதியில் நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, அண்மையில் வீட்டு உரிமையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் இதர பங்காளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
தென் கரையோரப் பகுதியில் அதிகளவானோர் பயணிக்கும் பகுதிகளில் அமையவுள்ள ஒன் தங்கல்லே, பிரைம் குழுமம் இன் ‘ஒரு தொகுப்பு’ பிரிவின் பெருமைக்குரிய புதிய உள்ளடக்கமாக அமைந்துள்ளது. இதனை நிர்மாணிக்கும் பொறுப்பை புகழ்பெற்ற துடாவே சகோதரர்கள் ஏற்றுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 வருடங்களுக்கு மேலான நம்பிக்கைச் சிறப்புடன் பிரைம் குழுமம், பிரத்தியேகத்தன்மை, ஒப்பற்ற சௌகரியம் மற்றும் இலங்கையில் சொகுசான வசிப்பிடத்தில் புதிய நியமத்தை எதிர்பார்க்கும் வீட்டு உரிமையாளர்களுக்காக ஒன் தங்கல்லே ஐ வடிவமைத்துள்ளது.
இந்த நிர்மாணத்தில் 38 பிரத்தியேகமான முறையில் வடிவமைக்கப்பட்ட இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட அதிகளவு இடவசதி படைத்த lagoon-sea villas அமைந்திருக்கும். இவை 1350 முதல் 2000 க்கும் அதிகமான சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும். உயர்மட்ட வாழ்க்கைமுறையை எதிர்பார்க்கும் வசிப்போருக்கு, சேவையளிக்கப்படும் தொடர்மனைகளின் சகல சௌகரியங்களையும் கொண்டிருக்கும் உகந்த தெரிவாக அமைந்திருக்கும்.
ஒவ்வொரு அலகும் தரை முதல் கூரை வரை கண்ணாடி ஜன்னல்களை கொண்டிருக்கும், ஒவ்வொரு தொடர்மனையிலிருந்தும் களப்பு மற்றும் கடலை பார்வையிடக்கூடிய வசதி, திறந்த சமையலறை மற்றும் பிரத்தியேகமான கொன்சேர்ஜ் பகுதி ஆகியவற்றை கொண்டிருக்கும். வசிப்போர், மற்றும் நவீன வசதிகள் படைத்த கட்டட பாதுகாப்பு சேவைகள் போன்ற உலகத் தரம் வாய்ந்த உள்ளம்சங்களை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.
செழுமையான உயிரியல் பரம்பல் மற்றும் கண்கவர் காட்சியம்சங்களைக் கொண்ட கரையோரங்களுக்காக புகழ்பெற்ற தங்காலை, பிரயாணிகள் மத்தியில் வேகமாக பிரபல்யமடையும் பகுதியாக அமைந்துள்ளது. முல்கிரிகல இராசதானி, ஹும்மானய நீர் தாரை, ரேகாவ ஆமை காப்பகம் மற்றும் கலாமெட்டிய பறவைகள் சரணாலயம் போன்ற பல புகழ்பெற்ற பார்வையிடும் பகுதிகள் அனைத்தும் ஒன் தங்கல்லே பகுதியிலிருந்து குறுகிய தூரத்தில் அமைந்துள்ளன. பசுமையான கடலுணவு, உள்நாட்டு உணவு வகைகள், துடிதாட்டமான சமூகம் மற்றும் நீர் விளையாட்டுகள் போன்றவற்றுக்கும் இப்பகுதி புகழ்பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தினூடாக பிரைம் குழுமம் இன் 30 வருட நம்பிக்கை மற்றும் நிபுணத்துவம் பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் ஒப்பற்ற தரம், பிரத்தியேகத்தன்மை மற்றும் நவீன சௌகரியத்தை பெற்றுக் கொள்வதையும் உறுதி செய்கிறது. தரம், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் தன்னிறைவு போன்றவற்றுக்கான அர்ப்பணிப்புடன், பிரைம் குழுமம் தொடர்ந்தும் இலங்கையின் சொகுசான வாழிட பகுதியை மாற்றியமைத்த வண்ணமுள்ளது. ஒன் தங்கல்லே பற்றிய மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்+94703777777.