புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் பத்துளு ஓயா பாலத்தில் நேற்று(14) இரவு முச்சக்கர வண்டி ஒன்று அதிக மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதியதில் கொழும்பு மற்றும் புத்தளம் ஆகிய திசைகளில் இருந்து வந்த கார் மற்றும் வேனுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்ததுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய கார் மற்றும் வேன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

