ஆந்திராவில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பலி

ஆந்திர மாநிலம் சிம்மாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வராக லக்ஷ்மி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி அதிகாலை தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் அதிகாலை 2:30 மணி அளவில் சிம்மாசனம் பகுதியில் கனத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது கோவிலில் உள்ள சுவர் ஒன்று கனமழையின் காரணமாக திடீரென இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் தரிசனத்திற்காக நின்று கொண்டிருந்த 9 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதோடு சிலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த தகவல் மீட்பு குழுவினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சுவரின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட பக்தர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *