இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்று(01) நடைபெற்றது.
இதன்போது உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன், வவுனியா பல்கலைக்கழக வேந்தர் மோகனதாஸ், சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறு திருமுருகன், சர்வமத தலைவர்கள், சிவில் சமூக வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





