எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என என அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (31) முதல் அமலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை அறிவித்திருந்தது.
இந்நிலையில், 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.
மேலும், 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

