வாள், கைக்கோடரியுடன் இருவர்கைது; தடுத்து வைத்து விசாரணை

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது வாள், கைக்கோடரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் இருவரும், போதைப்பொருட்களுடன் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே ஆயுதங்களுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 9 பேரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *