சுனிதா வில்லியம்ஸ்
சுனிதாவில்லியம்ஸ் இன் தந்தை தீபக் பாண்ட்யா 1957 ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு உர்சுலின் போன்னியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1965 ம் ஆண்டில் சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார்.
1998-ல் நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளி வீராங்கனையானார் சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர்.
சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவில் பிறந்திருந்தாலும், ஒரு இந்தியரின் மகள். அவருடைய தந்தை குஜராத் மாநிலத்தை சேர்ந்த தீபக் பாண்டியா. தாயார் உர்சுலின் போனியா ஆவார்.
1987ம் ஆண்டில் காதல் திருமணம் செய்தார் சுனிதா வில்லியம்ஸ். கடற்படையில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் காவல்துறையில் பணியாற்றும் மிஷல் ஜெ.வில்லியம்ஸை காதலித்து மணந்து கொண்டார்.
1983ம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் அன்னபோலீஸில் உள்ள அமெரிக்க கடற்படை அகாடமியில் இணைந்தார். இங்கு தமது பயிற்சியை முடித்துக் கொண்ட அவர் 1989ம் ஆண்டு கடற்படையில் பயிற்சி விமானியாக இணைந்தார்.
1989ம் ஆண்டு முதல் போர்க்கள விமான பயிற்சியும் பெற்றார். பெர்சியன் வளைகுடா போருக்கான முன்கள பணியின் போது பலமுறை ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு மியாமியில் ஆண்ட்ரூ சூறாவளி தாக்கிய போது மீட்புப்பணிகளில் சுனிதா ஈடுபட்டுள்ளார்.
விண்வெளி வீரர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டோது சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் சைப்பானில் (USS Saipan) பணியமர்த்தப்பட்டு இருந்தார்.
ஃப்ளோரிடா தொழில்நுட்ப நிறுவனத்தில் எம்எஸ் பொறியியல் மேலாண்மைப் படிப்பை முடித்த அவர், 1998ம் ஆண்டில் விண்வெளி வீரருக்கான பயிற்சியில் இணைந்தார். மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அரசின் விண்வெளி ஆய்வு மையத்தில் இவருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
2015ம் ஆண்டில் வணிகரீதியான விண்வெளி பயணங்களுக்கான முதல் விண்வெளி வீரராக சுனிதா வில்லியம்ஸ் அறிவிக்கப்பட்டார். இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக 2024ம் ஆண்டு ஜூன் 5ம் திகதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணமானார்.
59 வயதான சுனிதா வில்லியம்ஸ் தமது விண்வெளிப் பயணத்தில் அனுபவத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். எதிர்பாராத விதமாக கூடுதல் நாட்கள் தங்க நேர்ந்த போதிலும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நாசா கூறியுள்ளது.
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியதை உலகமே கொண்டாடி வருகிறது. ஆனால் மற்றவர்களைவிட இது இந்தியாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.