200 பேர் கொண்ட குழுவினர் அட்டாளைச்சேனையிலிருந்து புறப்பட்டனர்

அட்டாளைச்சேனை அனர்த்த முகாமைத்துவக் குழுவின் ஏற்பாட்டில் 200 பேர் கொண்ட குழுவினர் அட்டாளைச்சேனையிலிருந்து புறப்பட்டது.

 

இக் குழுவில் மின்சார, நீர் வசதிகள் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளில் அவற்றைத் திருத்துவதற்காக 50 மின்தொழிலாளர்கள், கழிவுநீர் குழாய் வேலைப்பாடாளர்கள் செல்வதும் குறிப்பிடத்தக்கது.

 

இக் குழுவினரின் பயணமானது அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் அஷ்ஷெய்க் என். எம். அப்துல் ஹபீல் (ரஷாதி) இனால் நிகழ்த்தப்பட்ட துஆப் பிரார்த்தனைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ. எல். பாயிஸ், றியா மசூர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ. எல். நசீர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம். ஏ. அன்சார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் இக்குழுவினரை வழியனுப்பியதுடன் பாதுகாப்பான பயணத்திற்கும் பயன்தரும் சேவைக்குமான வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *