பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பதற்கான உடன்படிக்கை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையே இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் 2026 இற்கான பாதீட்டு ஆலோசனைக்கமைய, தற்போது வழங்கப்பட்டு வரும் 1,350 ரூபா நாளாந்த வேதனம் 400 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாளைக்கான சம்பளம் இன்றுமுதல் 1,750 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

