கட்டுடை விநாயகர் விளையாட்டுக் கழகம் அழைக்கப்பட்ட அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியைக் கழக மைதானத்தில் நடாத்தியது.
மேற்படி போட்டியின் இறுதிச் சுற்று நேற்று(06) இரவு இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் உடுவில் அம்பாள் விளையாட்டுக் கழக ஏ அணியை வெற்றி கொண்டு இணுவில் துர்க்கா விளையாட்டுக் கழகம் சம்பியன் ஆகியது.
மூன்றாம் இடத்தை உடுவில் அம்பாள் பி அணியும், நான்காம் இடத்தைப் பிள்ளையார் விளையாட்டுக் கழகமும் பெற்றன.
போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு வெற்றிக் கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் பணப் பரிசில்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.


