கைதான 12 இந்திய கடற்தொழிலாளர்களுக்கும் விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளுடன் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 12 கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடித்துறை முகத்திற்கு கொண்டு வந்த கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழிலாளர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து 12 கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *