’தாய் கிழவி’ ரஜினி நடிக்க வேண்டிய படம் – ராதிகா சரத்குமார்

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் தயாராகியுள்ள படம் தான் தாய் கிழவி.

ராதிகாவின் அசத்தலான லுக்கில் அவரது கதாபாத்திரத்தை மையமாக கொண்டு நகைச்சுவை பாணியில் படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் பேஸன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார்.

அண்மையில் பிரபலங்கள் சூழ இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதில் நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, இது உண்மையில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம், அவர் இந்த வேஷம் போட்டு நடிக்கமாட்டார். எனவே அதை பெண் பாத்திரமாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *