கிழக்கு மாகாணத்தில் புதிய  கராத்தே விதிமுறைகள் குறித்த விசேட கருத்தரங்கு

கிழக்கு மாகாண ஷோடோகான் கராத்தே சம்மேளனத்தின் ஏற்பாட்டில், உலக கராத்தே சம்மேளனத்தின் 2026ஆம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகள் குறித்த விசேட வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று(22) மட்டக்களப்பு கிரீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு கிழக்கு மாகாண ஷோடோகான் கராத்தே சம்மேளனத்தின் தலைவர் ஷிஹான் கேந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மேளனத்தின் செயலாளர் குககுமாரராஜா,  பொருளாளர் வஹாப்தீன் மற்றும் சம்மேளனத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

“நடுவர்கள் மற்றும் வீரர்களுக்கான உலக கராத்தே சம்மேளனத்தின் 2026 ம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகள் சம்பந்தமான
இந்தக் கருத்தரங்கை இலங்கை கராத்தே தோ சம்பளத்தின் நடுவர் குழுவின் முன்னாள் தலைவரான ஷிஹான் அலெக்சாண்டர் வழிநடத்தினார். அவர் 2026ஆம் ஆண்டுக்கான புதிய விதிமுறைப் புத்தகத்தில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 19 கராத்தே கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 145 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப நடுவர்களின் தீர்ப்பு வழங்கும் திறனை மேம்படுத்தவும், புதிய விதிகளுக்கு அமைய வீரர்களைப் பயிற்றுவிக்கவும் இந்த அமர்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

கிழக்கு மாகாண கராத்தே துறையின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, பங்குபற்றிய அனைவருக்கும் ஒரு பயனுள்ள அனுபவமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *