‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் ஆரம்பம்

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரவி மோகன், ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

அதன் மூலம் ‘ப்ரோ கோட்’ மற்றும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ என இரண்டு திரைப்படங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இதில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தை ரவி மோகனே இயக்கியும் தயாரித்தும் வருகிறார்.

இதன் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். நகைச்சுவையுடன் சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக விவான் ஆம்பரோஸ், இசையமைப்பாளராக ஹைட்ரோ, கலை இயக்குநராக செளந்தர் மற்றும் ஆடை வடிவமைப்பாளராக பிரவீன் ராஜ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து படக்குழு இதுவரை அறிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *