மஸ்ஜித்தின் மகுடங்கள் – என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிவாயல்களில் கடமையாற்றிவரும் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் மஸ்ஜித் ஊழியர்களுக்கு புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு உணவுப் பொதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது.

 

மஸ்ஜித்களில் கடமைபுரியும் இவர்களது சமூக மற்றும் மார்க்க சேவையை மதிப்பளிக்கும் வகையில் இத்தகைய உதவித் திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இம்முறை 600 மேற்பட்டவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

 

​”மக்களுக்காக இறை இல்லங்களில் தங்களை அர்ப்பணித்துள்ள இந்த ஆன்மீகப் பணியாளர்களின் சேவையை மதிப்பளிப்பதும், அவர்களுக்குத் தோள் கொடுப்பதும் எமது சமூகக் கடமையாகும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *