இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு உலக பொருளாதார சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது.

இந்த நிலையில், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வரும் நிலையில், அதன் தாக்கம் தங்கத்திலும் எதிரொலித்துள்ளது. நேற்று(09) ஒரு கிராம் தங்கம் 9,015 ரூபாவுக்கும், ஒரு சவரன் தங்கம் 72,120 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று(10) 22 கரட் தங்கம் கிராமுக்கு 30 ரூபா உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 9,045 ரூபாவுக்கும் சவரனுக்கு 240 ரூபா உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 72,360 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு 15 ரூபா உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7,450 ரூபாவுக்கும், ஒரு சவரன் தங்கம் 59,600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாவுக்கும், ஒரு கிலோ வெள்ளி 1,10,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *