வடக்கு கிழக்கு யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி , மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் உலகம் முழுவதும் தமிழர் வாழும் பிரதேசங்களில் கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் மிகவும் அமைதியான முறையில் உணர்வுப்பூர்வமாக தியாகிகளை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நிகழ்வு நடத்த பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிந்தது.
இருப்பினும் அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும்
உறவினர்கள் மாவீர நாளை உணர்வெழுச்சியுடன் இலங்கை இராணுவக் கட்டுப்பாடுகளை மீறி மற்றும் நிகழ்வுகளை நடாத்துவதற்கான நீதிமன்றத் தடை உத்தரவுகளை மீறி படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர்கள் தூவி உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதற்காக முன் கூட்டியே துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
செய்தி நிருபர் திருமலை சூரியா

