இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் திகதி குறித்த பதவியை பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையமும் இலங்கை மின்சார சபையும் ஒப்புக் கொண்ட சூத்திரத்தின்படி மின்சாரக் கட்டணத்தைத் திருத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது தயாரிக்கப்பட்ட பிறகு பொதுப் பயன்பாட்டு ஆணையத்தால் இந்த திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *