ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிடியாணை உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கோட்டை நீதவான் பசன் அமரசேன, பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாகவே ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டஇருவருக்கு இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *