கார் மற்றும் கனரக வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொக்காவில் 54ம் மைல்கல் பகுதியில் இன்று(16) மாலை 5.30மணியலவில் மாங்குளம் பகுதியில் பயணித்த கார் மற்றும் அதே பகுதியில் இருந்து பயணித்த கண்ரக வாகனமும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேலை ஏற்பட்ட விபத்து காரணமாக காரில் பயணித்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *