கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினர் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம்18 வடக்கு கிழக்கில் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் உட்பட வர்த்தக நிலையங்களையும் மூடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நிகழ்த்துவதற்கு ஒத்தாசை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினர் அறைகூவல் விடுத்துள்ளனர்.
ஒட்டு மொத்த நிலையங்கள் குறிப்பாக மதுபானசாலைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது அன்பான வேண்டுகோள் இன்று வர்த்தக சங்கத்தினர் மேற்கொண்ட ஊடக சந்திப்பின் வாயிலாக கிளிநொச்சி மாவட்டத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் அனைத்து வர்த்தகர்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதோடு கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் அந்த வழியை சுமந்து இந்த மக்களுக்கான ஒரு ஆதரவை தெரிவிக்க வேண்டும் உலக நாடுகளுக்கு நாங்கள் தமிழர்கள் ஒன்றாக இருக்கின்றோம்.
எமது உறவுகளைப் பிரிந்து 17 ஆண்டுகள் கடந்துஉறவுகளை நினைவு கூறுவதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினர் அறைகூவல் விடுத்துள்ளனர்.

