இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இன்றைய தினம் (21) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள மாற்று விகிதங்களின் படி,

 

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 354.03 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 342.63 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

தொடர்ச்சியாக டொலரின் மதிப்பு அதிகரித்து வருவதால், இலங்கை ரூபாய் மேலும் பலவீனமடைந்து வருவதாக மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *