பாண்டிராஜின் ‘பரிமளா & கோ’ புரோமோ வெளியீடு – ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான ‘பரிமளா & கோ’ படத்தின் புதிய புரோமோ வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ், தொடர்ந்து ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட வசூலை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாண்டிராஜ் தற்போது ‘பரிமளா & கோ’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன் மற்றும் அனந்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், ஒளிப்பதிவை ஜியார்ஜி சி வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நகைச்சுவை கலந்த குடும்பக் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புரோமோ வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *