வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

 

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன் இன்று (13) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

 

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பரிமாறி தமிழ்மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும், வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்துவதற்காக இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *