சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூவர் கைது

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று(08) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அதன்படி, மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்டவர் ஜயசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *