போதைப்பொருள் பாவித்ததாக சந்தேகிக்கப்படும் 10 சாரதிகள் கைது

போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் ஹொரனை பொலிஸார் இணைந்து, ஹொரனை நகரிலிருந்து பயணிக்கும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் சாரதிகளை இலக்கு வைத்து நடத்திய விசேட போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் பாவித்ததாக சந்தேகிக்கப்படும் 10 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், போதைப்பொருள் பாவனையுடன் வாகனங்களைச் செலுத்துவதைத் தடுக்கும் நோக்கிலும் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இந்தவிசேட நடவடிக்கையின் போது, ஹொரனை நகரிலிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் பயணிக்கும் 150 பஸ்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவற்றில் 10 சாரதிகள் போதைப்பொருள் பாவித்துள்ளமை ஆரம்பக்கட்ட சோதனைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹொரனை பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை ஹொனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *