மன்னார் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜிஏ கிண்ண விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, அதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (11) மன்னார் மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது போட்டி ஏற்பாடுகள், விளையாட்டு வீரர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் விளையாட்டுக் கழகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

